Dr.Premvel, Dhanvanthri Nilayam Ayurveda Vaidhyasalai

You are Here - Home | Dr. S.தன்வந்திரி பிரேம்வேல் தன்வந்திரி சுகாதாரப்பொருட்கள்

Dr. S.தன்வந்திரி பிரேம்வேல் தன்வந்திரி சுகாதாரப்பொருட்கள்

Dr. S.தன்வந்திரி பிரேம்வேல் தன்வந்திரி நிலையம் ஆயுர்வேத வைத்தியசாலையில் நாங்கள் தரமான உயர்ரக சுகாதாரப்பொருட்களை வழங்குகிறோம். எங்கள் பொருட்கள் அனைத்தும் நோய்களை குணப்படுத்துவதற்கு மட்டும் அல்லாமல் ஆரோக்கியமான வாழ்வை நாம் வாழவும் உதவி செய்யும். எங்கள் பொருட்கள் அனைத்தும் 100% இயற்கை முறையிலும் கேடுவிளைவிக்கும் ரசாயனம் பயன்படுத்தாமலும் தயாரிக்கப்பட்டவை. கடுமையான முயற்சி மற்றும் அர்ப்பணிப்பினால் எங்களிடம் வரும் அனைவருக்கும் நாங்கள் தரமான மற்றும் உயர்ரக பொருட்களை மட்டுமே வழங்குகிறோம்.

இன்றைய சூழலில் ஒரு ஆரோக்கியமற்ற வாழ்க்கையும் மன அழுத்தத்தையுமே பெறுகிறோம். வேகமாக உருண்டு கொண்டிருக்கும் இந்த உலக வாழ்க்கையில் ஒரு நிமிடம் நம் ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்கவும் நேரம் கிடைப்பதில்லை. மாறிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனவே உங்கள் மனதை ஆசுவாசப்படுத்தி ஆரோக்கியமான சூழலை வழங்குவது மிகவும் முக்கியம். நம்மில் பலர் நம் பழக்கவழக்கங்களினாலும் தவறான வாழ்க்கை முறைகளினாலும் பல இன்னல்களை ஒவ்வொரு நாளும் சந்திக்க நேரிடுகிறது. இவை அனைத்தும் ஒரே நாளில் மாற்றத்தை கண்டுவிடாது. ஆயுர்வேத மருத்துவமுறைகள் அந்த மாற்றங்களை ஏற்படுத்த நமக்கு உதவி செய்யும்.

எங்கள் ஆயுர்வேத மருத்துவப்பொருட்களின் மூலம் ஜீரணத்தன்மை, தோல் பிரச்சனைகள், வளர்சிதை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது மட்டுமின்றி முழுமையான ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். ஒரே நாளில் மருந்தின் பலனை நம்மால் காண இயலாது முறையான பலன்களை அறிந்துகொள்ள சரியான முறைகளை பின்பற்ற வேண்டும். எங்கள் ஆயுர்வேத வைத்தியசாலையில் இதைப்பற்றிய புரிதலை மக்களுக்கு தெரிவிக்கின்றோம். யோகா மற்றும் ஆயுர்வேத முறைகள் நம்ம உடலை மட்டும் தூய்மை படுத்துவது அல்ல, நம் மனதையும் தூய்மை ஆக்குகின்றது. உடலும் மனமும் சுத்தமாக இருக்கும் பொது நமக்கு வரக்கூடிய நோய்களை தடுக்கும் ஆற்றல் நமக்குள் பிறக்கிறது.

எங்கள் சுகாதாரப்பொருட்களை பயன்படுத்தும் பொழுது மாற்றங்களை மட்டும் நாம் உணர்வது அல்ல. ஆரோக்கியத்தை நோக்கிய ஒரு பாதை என்பது புலப்படும். சரிஉணவு பழக்கம் சரியான வாழ்க்கைமுறை மற்றும் நம் வைத்தியசாலையில் தரப்படும் ஆரோக்கியமான இயற்கைப்பொருட்கள் அனைத்தும் நம் உடலையும் மனதையும் தயார் செய்து நமக்கு இருக்கும் உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். எங்களிடம் நச்சுத்தன்மை வெளியேற்றும் மருந்து, சருமபாதுகாப்பு சாதனங்கள், ஆரோக்கியகாப்பான்கள் அனைத்தும் உள்ளன.

கடந்த சில நூற்றாண்டுகளாக இந்தியாவின் தலைசிறந்த ஆயுர்வேத மருத்துவமனை பட்டியலில் Dr. S.தன்வந்திரி பிரேம்வேல் தன்வந்திரி நிலையம் ஆயுர்வேத வைத்தியசாலை இடம்பெற்றுள்ளது. எங்கள் வைத்தியசாலையில் ஒவ்வொருவரின் உடல் பிரச்சனை மற்றும் சமூக பொருளாதார பிரச்சனைகளையும் ஆராய்ந்து அவர்களுக்கு ஏற்ற மருந்தினை மட்டுமே பரிந்துரை செய்கிறோம்.

© 2018 Dhanvanthri Nilayam Ayurveda Vaidhyasalai. All Rights Reserved. Powered by